உமேஷ் யாதவ் தந்தை காலமானார்!! கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!!

 
உமேஷ் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர்  உமேஷ் யாதவ். இவரின் தந்தை திலக் யாதவ் . இவருக்கு வயது 74. இவர் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார்.  இதனையடுத்து நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  அவருடைய உடல் நிலையும் சீராக இருந்ததால் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார். 

உமேஷ் யாதவ்
இவருடைய திடீர் மறைவு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள்  தங்களுடைய இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். திலக் யாதவின் இறுதிச்சடங்கு நாக்பூரில் உள்ள கோலார் ஆற்றங்கரையில் நடைபெற்றது .உத்தரபிரதேச மாநிலம், பத்ருனா மாவட்டத்தில் உள்ள போகர்பிந்தா கிராமத்தில் திலக் யாதவ் வசித்து வந்தார். இவர் தன்னுடைய இளமை காலத்தில்  பிரபலமான மல்யுத்த வீரராக இருந்தார்.  

உமேஷ் யாதவ்

திலக் யாதவுக்கு மூன்று மகன்கள்.  கமலேஷ், கிரிக்கெட் வீரர் உமேஷ், ரமேஷ் மற்றும் ஒரு மகள். உமேஷ் யாதவ் 35 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்துள்ளார்,  அவர் இதுவரை இந்தியாவுக்காக 54 டெஸ்ட், 75 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.உமேஷ் யாதவ் 54 டெஸ்ட் போட்டிகளில் 164 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுகளையும், டி20 சர்வதேச போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.  தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட BGT தொடருக்கான இந்திய அணியில் உமேஷ் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web