அம்..மாடியோவ்!! ரூ535 கோடி ரொக்கப்பணத்துடன் நடுவழியில் நின்ற கண்டெய்னர்!! பரபரப்பு!!

 
ரூ535கோடி

வங்கிகளில் பணப்புழக்கம் என்பது வாடிக்கையாளர்கள் பணவர்த்தனை தவிர ரிசர்வ் வங்கி பணத்தின் மூலம் தான் செயல்படுகிறது. அந்த வகையில் விழுப்புரம் வங்கிகளுக்கு சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கமான நடைமுறை . இந்த பணத்தை கண்டெய்னர் லாரிகள் மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனுப்பி வைக்கப்படும். அதன்படி இன்று ரொக்கமாக ரூ535 கோடி சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து  பணம் எடுத்து செல்லப்பட்ட போது  தாம்பரம் அருகே வாகனம் பழுதானது. இதனால் கண்டெய்னர் லாரி  சித்த மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு வாகனத்தை சரி செய்யும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ரூ535கோடி


நேரம் கடந்து கொண்டே இருந்ததே தவிர வாகனத்தை சரிசெய்ய முடியவில்லை. இதனையடுத்து இரண்டு வாகனங்களும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு திருப்பி அனுப்பும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி  பழுதான வாகனத்தை மட்டும் கட்டி இழுத்து செல்வதற்கு மேலும் ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் கட்டி இழுத்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகளை வங்கி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டனர்.ரூ. 535 கோடி பணத்துடன் வாகனம் பழுதானதால் உடனடியாக  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ரிசர்வ் வங்கி
வாகனத்திற்கு  உதவி கமிஷனர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது  திடீரென பழுதான வாகனத்திற்கு அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் அப்பகுதியில்  பரபரப்பு தொற்றிக் கொண்டது. இச்சம்பவம் குறித்துவாகன ஓட்டுனர்  ரொக்கப்பணம் அனுப்பி வைக்கப்படுவது  வழக்கமான நடைமுறைதான்  என்றபோதிலும் திடீரென வாகனத்தின் ஒரு வாகனத்தில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது தவிர்க்க முடியாதது எனத் தெரிவித்தார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web