கள்ளக்காதலால் தகராறு … இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த சித்தப்பா...!
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே தலக்குளத்தை சேர்ந்த அருண் பிரசாத் (34) என்பவரின் மனைவி சுபிதா (28) கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 9 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையில் தும்பவிளை பகுதியை சேர்ந்த அனீஸ் (30) என்பவருடன் சுபிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகராறு அதிகரித்ததால் சுபிதா தனது தாயார் வீட்டில் தங்கி, நாகர்கோவிலில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மகன்கள் தந்தையுடன் தங்கியிருந்த நேரத்தில் அனீஸை வீட்டுக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அனீஸுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த சுபிதாவின் சித்தப்பா ராஜேஷ் (45) கண்டித்ததாக தெரிகிறது.

இதையடுத்து ஏற்பட்ட தகராறில் மாற்றுத் திறனாளியான ராஜேஷை சுபிதா தள்ளியதால் அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ராஜேஷ் அரிவாளால் சுபிதாவை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்த சுபிதா அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்ட நிலையில், மறுநாள் காலை கதவை உடைத்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
