டிசம்பர் 4 முதல் 16 வயதுக்குட்பட்டோர் இன்ஸ்டா , பேஸ்புக் பயன்படுத்த தடை... மெட்டா அவசர நடவடிக்கை

 
இன்ஸ்டா
 

ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக்‌டாக், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்த தடையை முன்னிட்டு, மெட்டா நிறுவனம் டிசம்பர் 4க்குள் சிறுவர்–சிறுமிகளின் கணக்குகளை முற்றாக முடக்கத் தொடங்கியுள்ளது. சமூக வலைதள அலைவில் குழந்தைகள் அதிக நேரம் செலவழிப்பதால் தூக்கமின்மை, கவனச்சிதறல் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்துள்ளன என்பதையே இந்த முடிவுக்கான முக்கிய காரணமாக அரசு கூறியுள்ளது.

சிறுவர் கணக்குகளை நீக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை மீறினால் ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட தளங்களை இயக்கும் மெட்டா, 16 வயதுக்குட்பட்ட பயனர்களின் கணக்குகளை நீக்கும் செயல்பாட்டை தொடங்கி, ஒவ்வொரு கணக்கும் நீக்கப்படும் போது அதற்கான தகவலை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வருகிறது.

“16 வயது ஆனவுடன் மீண்டும் எங்கள் சேவைகளை பயன்படுத்தலாம்; நீக்கப்பட்ட கணக்குகளும் அப்படியே கிடைக்கும்” என மெட்டா அறிவித்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் 13 முதல் 15 வயதுக்கிடையில் 3.5 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம், 1.5 லட்சம் பேர் பேஸ்புக் பயன்படுத்தி வருவதாக அரசு தரவுகள் கூறுகின்றன. இவர்களின் கணக்குகள் அனைத்தும் டிசம்பர் 4க்குள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!