யூனியன் வங்கியில் உதவி மேலாளர் வேலை..!

 
 யூனியன் வங்கியில்  உதவி மேலாளர்

யூனியன் வங்கியில்  பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 
1.  உதவி மேலாளர் (கடன்): இந்த பிரிவில் மொத்தம் 250 பணியியிடங்கள் உள்ளன. 

 யூனியன் வங்கி
மாதச்சம்பளம் :  ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை சம்பளம்   பட்டப்படிப்புடன் CA/ CMA(ICWA)/ CS முடித்திருக்க வேண்டும் அல்லது நிதித்துறையில் முழுநேர MBA/ MMS/ PGDM/ PGDBM பட்டம் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். 
2.  உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்): இந்த பிரிவிலும் 250 காலியிடங்கள் உள்ளன. இதற்கும் மாதம் ரூ. 48,480 – 85,920 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுநேர B.E./ B.Tech/ MCA/ MSc (IT)/ MS/ M.Tech அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ ஐடி/ எலக்ட்ரானிக்ஸ் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளில் 5 வருட ஒருங்கிணைந்த எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 வயது :  22 -30   சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு. SC/ ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரையிலும் வயது தளர்வு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம் : 1180/-
SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகள் -  ரூ. 177/-  
தேர்வு முறை :  ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் (Group Discussion) மற்றும் தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview) என மூன்று கட்ட முறைகள் பின்பற்றப்படும்.


முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2025
விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யூனியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.unionbankofindia.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web