பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை... மத்திய பட்ஜெட் எப்போது?

 
பட்ஜெட்
 

ஒன்றிய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், அடுத்த ஆண்டு அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதியே ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

பட்ஜெட்

இதுகுறித்து ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, இது போன்ற முடிவுகள் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவால் உரிய நேரத்தில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில், நாடாளுமன்ற நடைமுறைகளின்படி ஞாயிற்றுக்கிழமையிலேயே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பட்ஜெட்

ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறுகையில், பொதுப் பட்ஜெட்டுக்கு நிரந்தர நாளாக பிப்ரவரி 1ம் தேதியே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது ஆங்கிலேயர் காலத்தில் உருவான நடைமுறை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 2017க்கு முன்பு பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அருண் ஜெட்லி காலத்தில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!