உன்னாவ் பலாத்கார வழக்கில் பாஜக மாஜி எம்எல்ஏ ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு!
நாட்டையே உலுக்கிய உன்னாவ் 17 வயது சிறுமி பலாத்கார வழக்கில் முக்கிய திருப்பமாக, முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேல்முறையீடு விசாரணை முடியும் வரை அவரை ஜாமீனில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
2017-ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட குல்தீப் சிங் செங்கார் மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் உயிரிழந்ததும், பின்னர் நடந்த மர்ம விபத்தும் வழக்கை மேலும் பரபரப்பாக்கின. 2019-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.15 லட்சம் பிணை, சிறுமி வசிக்கும் பகுதியை அணுகக் கூடாது, வாரந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு உன்னாவ் வழக்கில் புதிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
