வரலாறு காணாத உயர்வு.. தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரிப்பு! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

வரலாறு காணாத விலை உயர்வாக ஆபரண தங்கம் சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.43,120 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உலகில் மதிப்புமிக்க உலோகங்களில் தங்கமும் ஒன்று. ஆபரணங்கள், சேமிப்பு என்று தங்கத்தை நாம் பல்வேறு வழிகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். பல நேரங்களில் நாம் இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கும் போது, தங்கமே காக்கும். எந்த நாட்டிற்குச் சென்றாலும் தங்கத்திற்கு எளிமையாக உள்ளூர் ரொக்கத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
இப்படி பல்வேறு வசதிகள் உள்ளதால், மக்கள் பலரும் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி சேமித்து வருகின்றனர். தனி மனிதர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் இதை உணர்ந்தே உள்ளன. இதன் காரணமாக உலகின் பல முக்கிய ரிசர்வ் வங்கிகளும் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி சேமித்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 65 ரூபாய் உயர்ந்து, ரூ.5,390-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ரூ.43,120-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,362-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 53 ரூபாய் உயர்ந்து, ரூ.4,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 69,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க