அசத்தியது இந்திய அணி! ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

 
இந்திய அணி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் முதல் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பல்வேறு டெஸ்ட் போட்டிகள் அடிப்படையில், இரண்டாவது ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில், புள்ளிகளின் அடிப்படையில் 68 புள்ளிகளுடன் முதல் அணியாக ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி

60 புள்ளிகளாய் பெற்ற இந்தியா 2ஆவது அணியாக இறுதி போட்டிக்கான வாய்ப்பில் இருந்தது. ஆஸ்திரேலியா தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றினால் கூட இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெரும் என்ற சூழல் இருந்தது. 

அதேபோல் இலங்கைக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், நியூசிலாந்து - இலங்கை இடையேயான போட்டியில், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் மட்டுமே இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெரும் என்ற சூழல் இருந்தது. இந்த நிலையில், முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றாலும் இலங்கை அணிக்கு வாய்ப்பு இருந்தது.

இந்திய அணி

எனினும் இப்போட்டியில் இலங்கை வெற்றிபெறாது என்பது உறுதியானது. இதன் மூலம் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது. 2ஆவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web