மீளாத் துயரம்... 31 வயசு தான் ஆச்சு.. பிரபல நடிகர் வில்லியம் ரஷ் காலமானார் - உடல் உறுப்புகள் தானம்!
திரையுலகில் வளர்ந்து வரும் இளம் திறமையாளராகக் கருதப்பட்ட வில்லியம் ரஷ், தனது 31வது வயதில் அகால மரணமடைந்தது ஒட்டுமொத்த சர்வதேசத் திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலத் தொலைக்காட்சித் தொடரான ‘வாட்டர்லூ ரோடு’ (Waterloo Road) மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த அவர், இவ்வளவு சீக்கிரம் விடைபெறுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இவரது மறைவுச் செய்தியை அவரது தாயாரும், பிரபல நடிகையுமான டெப்பி ரஷ் மிகுந்த சோகத்துடன் உறுதி செய்துள்ளார்.
தனது மகனின் மறைவு குறித்துப் பேசிய டெப்பி ரஷ், "என் இதயமே நொறுங்கிப் போய்விட்டது. என் அன்பு மகன் வில்லியம் இனி எங்களுடன் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். வில்லியம் ரஷ் உயிரிழப்பதற்கான அதிகாரப்பூர்வக் காரணம் என்ன என்பது குறித்து அவரது குடும்பத்தினர் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இது ஒருபுறம் மர்மமாக இருந்தாலும், அவரது குடும்பத்தினர் எடுத்துள்ள ஒரு உயரிய முடிவு அனைவரது நெகிழ்ச்சியையும் பெற்றுள்ளது. வில்லியமின் நீண்ட கால விருப்பத்தின்படி, அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் தானம் செய்யப்பட உள்ளதாக அவரது தாயார் அறிவித்துள்ளார். மறைந்த பின்பும் மற்றவர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் பலராலும் போற்றப்படுகிறது.
வில்லியம் ரஷ், 'வாட்டர்லூ ரோடு' தொடரில் லியோ பிட்ஸ்ஜெரால்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். நடிப்பு மட்டுமல்லாது இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், 'தி எக்ஸ் ஃபேக்டர்' (The X Factor) போன்ற இசை நிகழ்ச்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு அவரது சக நடிகர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஒரு துடிப்பான கலைஞனின் வாழ்வு இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்தது திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
