பகீர் குற்றச்சாட்டு!! தேவாலயத்தில் தீண்டாமை பாகுபாடு.!!.

 
கத்தோலிக்க

இந்து மதத்தில்தான் சாதிய கட்டமைப்புகள் கடுமையாக கடைபிடிக்கப்படுவதாக அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கடுமையாக குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கொடூரமுறை இன்றளவும் நடைமுறையில் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பல்வேறு கோவில்களில் தலித்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவது இன்றும் தொடர்கிறது. 

அந்த வரிசையில் கிறிஸ்தவத்திலும் இந்த அவலநிலை அவ்வப்போது தலைதூக்குவதாக உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அய்யம்பட்டி கிராமத்தினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இது தொடர்பாக பேசிய அவர்கள், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற புனித மதலேன் மரியாள் ஆலய தேர் திருவிழாவுக்கு கத்தோலிக்க தலித் கிறிஸ்தவராகிய நாங்கள் வரி கொடுப்பதற்காக அய்யம்பட்டி பங்குத் தந்தையிடம் முறையிட்டோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். 

கத்தோலிக்க

ஆனால், கிராம முக்கியஸ்தர்கள் சிலர் எங்களிடம் வரி வாங்க எதிர்ப்பு தெரிவித்து, பங்கு அருட்தந்தையை மிரட்டியதுடன், இனி இந்த பங்குக்கு திருப்பலி செய்ய வரக்கூடாது எனக் கூறி அனுப்பிவிட்டனர்.

கத்தோலிக்க

திருவிழாவின்போது சிலையை தூக்கி தேரில் வைக்கவும், தேர் பிடித்து இழுக்கவும், எங்கள் தெருவுக்கு தேர் வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வாடிகன், இந்திய மற்றும் தமிழக ஆயர் பேரவை, மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம், என்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web