இந்தியா முழுவதும் யுபிஐ சேவை பாதிப்பு... பயனர்கள் கடும் அவதி!

 
 யுபிஐ

இந்தியா முழுவதும்  டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் உட்பட பல  செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. தினமும் கோடிக்கணக்கான ரூபாய் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு வரும்  நிலையில், நாடு முழுவதும் யுபிஐ சேவை இன்று பாதிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ

 காலை 11 மணி முதல் யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டு பயனாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதால் பயனாளர்கள் அவதியடைந்தனர்.  உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது, மின்கட்டணம் செலுத்துவது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு யுபிஐயை நம்பியிருக்கும் ஏராளமான மக்களை வெகுவாக பாதித்தது. இந்தியாவின்  பெரும்பாலான பகுதிகளில் இந்த பிரச்சினை நிலவி வருகிறது. 

யுபிஐ

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்  நிலையில் அதை சரிசெய்யும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய கொடுப்பனவு கழகம்  இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web