சிவில் சேவைத் தேர்வு கட்டணம் எவ்வளவு? தேர்வாணையம் முழு தகவல்கள் வெளியீடு!
யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சேவைத் தேர்வுக்கான கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன. பெண்கள், பட்டியலின மக்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் இணைய வங்கி சேவை, பற்று அட்டை, கடன் அட்டை அல்லது ஒருங்கிணைந்த கட்டண முறையின் மூலம் செலுத்தலாம்.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறும் தேர்வர்கள் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்திலிருந்தும் பெண்கள், பட்டியலின மக்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் விலக்கு பெறுவர். சமூக நீதியை கருத்தில் கொண்டு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான பின் முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் செலுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணம் செலுத்தாதவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
