அவசர உத்தரவு... தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

 
டிபிஐ பள்ளி கல்வித்துறை

தமிழகத்தில் தெரு நாய்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிக் கல்வித் துறை அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நியமிக்கப்பட வேண்டிய நோடல் அதிகாரி குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:

உள்ளாட்சிக்குத் தகவல்:

பள்ளியைச் சுற்றியுள்ள இடங்களில் தெரு நாய்கள் இருப்பதை அறிந்தால், உடனடியாக உள்ளாட்சி அலுவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

நாய்

விளையாடுவதைத் தவிர்த்தல்:

மாணவர்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடுவதையோ அல்லது அவற்றிற்கு உணவளிப்பதையோ தவிர்க்கத் தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.

விழிப்புணர்வு:

ரேபிஸ் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

பெற்றோர் சந்திப்பு:

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும்.

நாய் தெருநாய் வெறிநாய்

அறிவிப்புப் பலகை:

தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்த விழிப்புணர்வுப் பதாகைகள் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

தகவல் தெரிவித்தல்:

தெரு நாய் கடிக்கு ஒரு மாணவர் உள்ளானால், அதை எவ்விதத் தயக்கமுமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்க உரிய அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

நோடல் அதிகாரி நியமனம்:

தலைமை ஆசிரியர்கள் கட்டாயமாக ஒரு நோடல் அதிகாரியை (Nodal Officer) நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி வளாகத்தின் பராமரிப்பு, தூய்மை மற்றும் தெரு நாய்கள் வளாகத்திற்குள் நுழையாதவாறு கண்காணிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். நோடல் அதிகாரியின் விவரங்கள் அறிவிப்புப் பலகையில் அனைவரும் அறியும் வகையிலும், உள்ளாட்சி அமைப்புக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

கால்நடைத் துறை சார்பில் நாய்களுக்குத் தடுப்பூசி போடுவது, இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக் கருத்தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், உள்ளாட்சி அமைப்புகள் தீவிர கவனம் செலுத்தாததால் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!