பட்டியலின மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. குடிக்கும் கூல்டிரிங்ஸில் சிறுநீர் கலந்த நண்பர்கள்..!!
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு, இளங்கலை சட்டப்பிரிவு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவர் ஒருவரும், அவருடன் படிக்கும் 2 மாணவர்களும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.கடந்த ஜனவரி 6ம் தேதி கல்லூரி வளாகத்தில் இளங்கலை இறுதியாண்டு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது நண்பர்கள் 2 பேரும் குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து பட்டியல் மாணவனுக்கு குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
![]()
அடுத்த நாள் நண்பர்கள் இருவரும் கேலி செய்தபோதுதான் சிறுநீரில் குளிர்பானம் கலந்திருப்பது பட்டியலிட்ட மாணவனுக்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட மாணவன் ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பட்டியலிடப்பட்ட மாணவனின் புகார் மீது நடவடிக்கை எடுக்க 3 உதவி பேராசிரியர்கள் கொண்ட ராகிங் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழு ஜனவரி 18ஆம் தேதி தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுபடுத்தியிருந்தது. மேலும், மாணவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. இந்நிலையில், பட்டியல் மாணவர் தனது நண்பர்கள் மீதான புகாரை வாபஸ் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
