அமெரிக்கா வெனிசுலா மீது தாக்குதல்... ஐநா தலையிட வேண்டும்... கொலம்பியா அதிபர் வலியுறுத்தல்!
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. தாக்குதல் நடந்த பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலின் காரணமாக வெனிசுலா ராணுவ தளத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பாதுகாப்புப் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்துவதாகக் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த சில மாதங்களாக வெனிசுலாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
