அமெரிக்காவில் 1 லட்சம் பேரின் விசாக்கள் ரத்து... இந்திய மாணவர்கள் பாதிப்பா? டிரம்ப் அதிரடி!

 
அமெரிக்கா விசா

"அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே" என்ற தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் குடியேற்றச் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். இதன் விளைவாக, சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, சுமார் 8,000 மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முறையான கல்வி நிறுவனங்களில் பயிலாதது அல்லது விசா விதிகளை மீறியது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா விசா க்ரீன் கார்டு

சுற்றுலா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசா ரத்து செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வெளியேற்றப்படுபவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்க விசா பெற முடியாதபடி 'கருப்புப் பட்டியலில்' (Blacklist) சேர்க்கப்படுவார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!