அமெரிக்கத் தூதரகம் முற்றுகை… நாளை இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்!

 
சிபிஐ

வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்ததை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை போராட்டம் அறிவித்துள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடும் இந்த போராட்டம், நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

இது வெனிசுலாவின் சுதந்திரம், ஜனநாயகம், இறையாண்மை ஆகியவற்றுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை என சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அமெரிக்கப் படைகள் வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு சிபிஐ முன்னாள் மாநில செயலாளர் ரா.முத்தரசன் தலைமை தாங்குகிறார். மாநில துணைச் செயலாளர் எம்.ரவி, தேசியக் குழு உறுப்பினர்கள் வஹிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கண்டன உரையாற்ற உள்ளனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டச் செயலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!