மற்றொரு கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா... பரபரப்பு!

 
கப்பல்
 

வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் அபாயகரமான போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என கூறி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரோவும், அவரது மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல் வழி போதை கடத்தலை முற்றிலும் ஒழிக்க, கடுமையான தாக்குதல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. போதை கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதாக சந்தேகிக்கப்பட்ட எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதன்படி, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ரஷியாவை சேர்ந்த மரைனிரா என்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. கண்காணிப்பில் இருந்து தப்ப, பெயரும் கொடியும் மாற்றப்பட்டாலும், அமெரிக்க படைகள் தொடர்ந்து பின்தொடர்ந்து கப்பலை கைப்பற்றின.

இதைத்தொடர்ந்து சோபியா, ஒலினா என பெயரிடப்பட்ட மேலும் இரண்டு எண்ணெய் கப்பல்களும் அமெரிக்க கடற்படையால் பிடிபட்டுள்ளன. உள்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் கடற்படை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என அமெரிக்க பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!