75 நாடுகளுக்கு அமெரிக்கா விசா பிரேக்… டிரம்ப் அதிரடி முடிவு!

 
அமெரிக்கா விசா
 

அமெரிக்காவில் பொது நலத்திட்டங்களை அதிகம் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈரான், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ரஷியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை எக்ஸ் பதிவில் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் சாரக்கூடிய நாடுகளிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. புதிய குடியேற்றவர்கள் நாட்டின் செல்வத்தை சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த முடிவு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளை மாளிகையும் இதே கருத்தை வெளியிட்டுள்ளது. புதிய குடியேற்றவர்கள் பொதுச் சுமையாக மாறாமல் இருப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கே முதன்மை என்ற கொள்கையின் அடிப்படையில் விசா செயலாக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!