அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு... ?

 
ஈரான்
 

ஈரானில் வரலாறு காணாத அளவில் பணவீக்கம் உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பொருளாதார தேக்கநிலையால் விரக்தி அடைந்த மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம், 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு பாதுகாப்புப் படையினரை களமிறக்கியுள்ளது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதுடன், வன்முறையை தடுக்கும் பெயரில் பல பகுதிகளில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை மையமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் தகவலின்படி, இந்த போராட்டங்களில் 544 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், 10,681 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரான் விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கருத்து தெரிவித்துள்ளார். ஈரான் தொடர்பான அனைத்து ஆவணங்களும் டிரம்பின் மேஜையில் இருப்பதாகவும், அதில் வான்வழி தாக்குதல் திட்டமும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். இருப்பினும் பேச்சுவார்த்தை தான் டிரம்பின் முதல் விருப்பம் என்றும், தேவையானால் ராணுவ நடவடிக்கையை எடுக்க அவர் தயங்கமாட்டார் என்றும் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!