வெனிசுலா மீது அமெரிக்க ராணுவ தாக்குதல் ஏன்?... காரணம் இது தான்!

 
வெனிசுலா

தலைநகர் கராகஸ் உட்பட வெனிசுலாவின் பல பகுதிகளில் ஜனவரி 3 அதிகாலை அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதல்களில் ராணுவ வசதிகள் மற்றும் சிவிலியன் இடங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், வெடிப்புகள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள் காணப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்தனர். இதையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வெனிசுலா

வெனிசுலா அரசின் அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த ராணுவ ஆக்கிரமிப்பு நாட்டின் இறையாண்மையை மீறியது. இயற்கை வளங்கள், குறிப்பாக எண்ணெய் மற்றும் கனிமங்களை அபகரிக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதிபர் நிக்கோலஸ் மதுரோ தேசிய பாதுகாப்புத் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டார். அண்டை நாடான கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

வெனிசுலா

தாக்குதல்கள் கராகஸில் உள்ள ஃபோர்ட் டியூனா ராணுவ தளம், லா கார்லோட்டா விமான தளம் மற்றும் மிராண்டா, அராகுவா, லா குவைரா மாநிலங்களில் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஊடகங்கள், அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாகவும், மதுரோவை பிடித்து நாட்டை விட்டு வெளியேற்றியதாகவும் தெரிவித்துள்ளன. இதனால் லத்தீன் அமெரிக்காவில் பெரும் பதற்றமும், சர்வதேச அளவில் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. வெனிசுலா அரசு உலக சமூகவினரிடம் இதை வன்மையாகக் கண்டிக்குமாறு கோரியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!