ஈரானை நோக்கி அமெரிக்க கடற்படை… டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!
ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை சென்று கொண்டிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கேற்ற பின்னர், விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார்.

ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட 837 பேரை தூக்கிலிட திட்டமிட்டதாக தகவல் வந்ததாக டிரம்ப் தெரிவித்தார். அவர்களை தூக்கிலிட்டால் இதுவரை காணாத அளவிலான கடும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்ததாக கூறினார். இதன் விளைவாக தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஈரான் அரசு அதை ரத்து செய்ததாக அவர் கூறினார்.

மேலும் ரஷியா–உக்ரைன் போர் குறித்தும் டிரம்ப் பேசினார். அந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வீரர்கள் வரை உயிரிழப்பதாகவும் தெரிவித்தார். இது பணம் தொடர்பான பிரச்சினை அல்ல, மனித உயிர்களின் பிரச்சினை என அவர் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
