ஈரான் மீது தாக்குதல் நடத்துவேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

 
ட்ரம்ப்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் அந்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களைக் கையாண்ட விதம் தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது 'Truth Social' பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சித்து, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் விடுத்துள்ள செய்தியில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர்க்கப்பல் படை ஈரானை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தலைமையிலான படை, சமீபத்தில் வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்ட படையை விட பெரியது என்றும், இது மிகுந்த வேகம் மற்றும் வலிமையுடன் செயல்படத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' தாக்குதலை நினைவு கூர்ந்த டிரம்ப், ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், அடுத்தகட்டமாக நடத்தப்படும் தாக்குதல் அதைவிட பல மடங்கு அழிவைத் தரும் என எச்சரித்துள்ளார்.

ட்ரம்ப்

ஈரான் தனது அணுசக்தி கனவுகளைக் கைவிட்டு, "நியாயமான மற்றும் சமமான" ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். "நேரம் கடந்து கொண்டிருக்கிறது, இது மிக முக்கியமான தருணம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரான் தனது ஐநா தூதரகத்தின் வாயிலாகப் பதிலளித்துள்ளது. "ஈரான் எப்போதுமே பரஸ்பர மரியாதையுடன் கூடிய பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், எங்களை யாராவது தாக்க முற்பட்டால், இதுவரை பார்த்திராத வகையில் எங்களது பதிலடி மிகக் கடுமையாக இருக்கும்" என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ட்ரம்ப்

டிரம்பின் இந்த மிரட்டலைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகள் அமைதியை நிலைநாட்ட தூதரக ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிபர் டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்புகள், ஈரான் மீதான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!