ரூ.24 கோடிக்கு ஏலம் போன இயேசு ஓவியம் - விருந்து நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அசத்தல்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புளோரிடாவில் உள்ள தனது மார்-எ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் பிரம்மாண்டமான புத்தாண்டு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் நடந்த ஒரு கலைப்பொருள் ஏலம் தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியில் வனேசா ஹோராபுனா என்ற பெண் ஓவியக் கலைஞர், மேடையிலேயே மின்னல் வேகத்தில் (Speed Painting முறையில்) இயேசு கிறிஸ்துவின் தத்ரூபமான ஓவியம் ஒன்றை வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஓவியம் வரைந்து முடிக்கப்பட்டதும், அதிபர் டிரம்ப் மேடையில் ஏறி தானே ஏலத்தை நடத்தத் தொடங்கினார்.
இந்த ஓவியத்தின் ஆரம்ப விலையை டிரம்ப் 1 மில்லியன் டாலர் என அறிவித்தார். ஏலம் கேட்க வந்த தொழிலதிபர்களைப் பார்த்து, "இங்கு வந்திருப்பவர்களிடம் நிறையப் பணம் இருக்கிறது" என்று தனது பாணிக் கிண்டலுடன் ஏலத்தை விறுவிறுப்பாக்கினார். கடும் போட்டிக்குப் பிறகு, அந்த ஓவியம் 2.75 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 24 கோடியே 75 லட்சம் ரூபாய்) ஏலம் போனது.
இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் சமூக நலப் பணிகளுக்காக வழங்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்: ஒரு பகுதி செயிண்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு வழங்கப்படும். மற்றொரு பகுதி உள்ளூர் ஷெரீப் (காவல்துறை) அலுவலகத்திற்கு வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வின் போது டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் உடனிருந்தார். புத்தாண்டு தினத்தில் ஆன்மிகம் மற்றும் தொண்டு சார்ந்த இந்த முயற்சி டிரம்ப்பின் ஆதரவாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
