ஐ.எஸ். மீது அமெரிக்காவின் கடும் தாக்குதல்… சிரியாவில் அதிரடி பதிலடி!

 
சிரியா
 

சிரியாவில் 2024-ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஆசாத் ஆட்சி முடிவுக்கு வந்தபின், புதிய அரசு அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த மாதம் பல்மைரா நகரில் நடந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் மற்றும் ஒரு அமெரிக்க குடிமகன் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. எட்கர் பிரையன் டோரஸ்-தோவர், வில்லியம் நதானியேல் ஹோவர்ட், அயாத் மன்சூர் சகாத் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டதற்கான பதிலடியாக, ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புப் படை வெளியிட்ட தகவலில், கூட்டணி படைகளுடன் இணைந்து ஐ.எஸ். நிலைகளுக்கு எதிராக தீவிர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எங்கள் வீரர்களுக்கு தீங்கு விளைவித்தால், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டறிந்து தாக்குவோம் என்பதே எங்கள் செய்தி என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு முன், ஐ.எஸ். இயக்கத்தின் ராணுவ தலைவரை கைது செய்ததாக சிரிய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!