தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை ஒப்படைக்க அமெரிக்கா முடிவு!

 
சிலை சிலை

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ‘ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியகம்’ சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 3 வெண்கலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

மீட்கப்படவுள்ள சிலைகள் அனைத்தும் தமிழகத்தின் வெவ்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பறைசாற்றுபவை. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் நடராஜர் சிலை  (சோழர் காலம்), 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோமாஸ்கந்தர் சிலை, 16ம் ஆண்டு விஜயநகர காலத்தைச் சேர்ந்த சுந்தரர் மற்றும் பரவை நாச்சியார் வெண்கலச் சிலைகள்.

இந்தச் சிலைகள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து அருங்காட்சியக நிபுணர்கள் பல ஆண்டுகளாகத் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆவணங்களை ஆய்வு செய்ததில், இவை பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகக் கோயில்களில் இருந்து திருடப்பட்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டிற்குத் தொல்பொருள் கடத்தல்காரர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, இந்தியா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது: மீட்கப்படவுள்ள 3 சிலைகளில், நடராஜர் சிலையை மட்டும் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்திலேயே நீண்ட கால அடிப்படையில் காட்சிப்படுத்த இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு காட்சிப்படுத்தப்படும்போது, அந்தச் சிலை தமிழகத்திற்குச் சொந்தமானது என்பது குறித்த முழு விவரங்களும் அங்குத் தெளிவாகக் குறிப்பிடப்படும்.

தென்னிந்தியாவின், குறிப்பாகத் தமிழகத்தின் வெண்கல வார்ப்புத் தொழில் நுட்பம் (Lost-wax casting) உலகப் புகழ் பெற்றது. இந்தச் சிலைகள் வெறும் சிலைகளாக மட்டும் பார்க்கப்படாமல், அவை கோயில்களின் திருவிழாக் காலங்களில் மக்கள் வழிபாட்டிற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் புனிதமான 'உற்சவ மூர்த்திகள்' என்பதை அருங்காட்சியக நிர்வாகம் தனது அறிக்கையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.

மோடி தலைமையிலான அரசு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 3 சிலைகளின் வருகை தமிழகத்தின் ஆன்மீக மற்றும் கலைத்துறைக்குக் கிடைத்த மற்றுமொரு பெருமையாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!