பயனர்கள் அதிர்ச்சி... யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி.? மத்திய அரசு விளக்கம்!

இந்தியா முழுவதும் யு.பி.ஐ. செயலிகளான போன்பே, கூகுள்பே, பேடிஎம் செயலிகளில் பணப்பரிமாற்றம் செய்யும்போது இதுவரை எந்த வரியும் விதிக்கப்படவில்லை. இனி வரும் காலங்களில் யு.பி.ஐ. பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
அதன்படி அனைத்து யு.பி.ஐ. செயலிகளிலும் ரூ.2000க்கும் அதிகமான பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் திட்டம் மத்திய நிதி அமைச்சகம் வசம் உள்ளது. அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்வார் என செய்திகள் பரவின.
இந்நிலையில், அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு “ யு.பி.ஐ. வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்வதை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.ரூ 2000க்கும் மேற்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை. எனவே, ரூ2000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என பரவும் தகவல் பொய்யானது" எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!