பயனர்கள் உற்சாகம்!! “வாட்ஸ் அப்” லேட்டஸ்ட் அப்டேட்!!

 
வாட்ஸ் அப்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களின் தகவல் பரிமாற்ற செயலியாக இருப்பது வாட்ஸ் அப் செயலி தான். இதனை மெட்டா நிறுவனம் கைப்பற்றிய பிறகு வாடிக்கையாளர்களின் தேவைகளை பொறுத்து புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.  அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாட்ஸ் அப் குரூப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,024 ஆக உயர்த்தப்பட்டது.

வாட்ஸ் அப்

தொடக்கத்தில் ஒரு குரூப்பில் 256 பேர் மட்டுமே இருக்க முடியும் என இருந்த நிலையில் பிறகு இந்த எண்ணிக்கை 512 என  அதிகரிக்கப்பட்டு  தற்போது 1,024 ஆக உயர்ந்துள்ளது. அதனைத்தொடர்ந்து பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பின் அடிப்படையில் அனுப்பப்படும் மெசேஜ் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் மற்றும் ரெக்கார்டிங் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

வாட்ஸ் அப்

அதே போல் சமீபத்தில்  ஆடியோக்களையும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கூடுதல் அம்சமாக வாட்ஸ்அப் குரூப்பில் யார் இணைய வேண்டும் என்பதையும் குரூப் அட்மின்களே  முடிவு செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான ஆப்ஷன்களை பெற  செட்டிங்ஸ்சில்  சென்று அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  இதன் மூலம் குரூப் அட்மின் விரும்பிய நபரை மட்டுமே குரூப்பில் அனுமதித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் அப்டேட் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web