உஷார் மக்களே... சுட்டெரிக்கும் கோடையால் அதிகரிக்கும் 'யு.டி.ஐ'... சிறுநீரகத் தொற்றால் மக்கள் அவதி!

 
water melon water melon

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிகளவில் சிறுநீரகப் பாதை தொற்று  பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கடும் வெயில் காரணமாக உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வை மூலம் வெளியேறுவதால், சிறுநீர் கழிக்கும் அளவு குறைகிறது. 

இதனால் சிறுநீர்ப் பாதையில் தங்கும் பாக்டீரியாக்கள் வெளியேற முடியாமல் அங்கேயே தங்கிப் பெருகி, கடுமையான எரிச்சல் மற்றும் வலியை உண்டாக்குகின்றன. இது குறித்து அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காகக் குவிந்து வருகின்றனர்.குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இந்தத் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிவயிற்று வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இது குறித்துச் சென்னை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் கூறுகையில், "கோடையில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. எனவே, கைகளில் எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது நல்லது" எனத் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!