7 திரைகளை விலக்கி வடலூரில் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்... லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

 
vadalur

வடலூர் சத்தியஞானசபையில் 155-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடிய வள்ளலார், 1867-ம் ஆண்டு வடலூரில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்தியஞானசபையை நிறுவினார். மனிதன் இறைவனை அடைய மனதிலுள்ள எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை மற்றும் கலப்பு என ஏழு திரைகள் விலக்கப்பட்டன. தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற்றது.

அப்போது சன்மார்க்க அன்பர்கள் “அருட்பெருஞ்ஜோதி” என்ற மகா மந்திரத்தை முழங்கினர். விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு, குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!