வடிவேலு வழக்கு விசாரணை ... சிங்கமுத்துவிற்கு ரூ.2,500 அபராதம்!

 
வடிவேலு சிங்கமுத்து


 
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு  அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்றம்  ஒரு தலைப்பட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி  சிங்கமுத்துவுக்கு 2500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

வடிவேலு சிங்கமுத்து
 சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து  தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கவேண்டும் என  நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில்   வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் வடிவேலுவுக்கு எதிராக இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.   நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வடிவேலு சிங்கமுத்து
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி இடைக்கால மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் பிரதான  விசாரணையில் சிங்கமுத்து நேரில் ஆஜராகாத நிலையில்  அவருக்கு எதிராக ஒரு தலைப் பட்ச தடை உத்தரவு பிறப்பிக்க பட்டது.   இந்த உத்தரவை எதிர்த்து , சிங்கமுத்து சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனக்கு 67 வயதாகிவிட்டதாகவும், உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதனால் வழக்கில் பதிலுரை தாக்கல் செய்ய முடியவில்லை  எனக் கூறியிருந்தார்.  நீதிபதி கே. குமரேஷ் பாபு, பிரதான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த  உத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் சிங்கமுத்து தரப்புக்கு 2500 ரூபாய் அபராதம் விதித்து அதை வடிவேலு தரப்புக்கு செலுத்தும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது