புகழ்பெற்ற தியேட்டரின் இணை நிறுவனரும், பிரபல நடிகையுமான வைத்யா காலமானார்.. பிரபலங்கள் கண்ணீர் !

 
ஜலபாலா வைத்யா

பழம்பெரும் நாடக நடிகையும், டெல்லியின் அக்ஷரா தியேட்டரின் இணை நிறுவனருமான ஜலபாலா வைத்யா காலமானார். அவளுக்கு 86 வயது. டெல்லியில் வசித்து வந்த ஜலபாலா வைத்யா, அண்மைக்காலமாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்ததாக அவரது மகளும் நாடக இயக்குநருமான அனசுயா வைத்யா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ஜலபால வைத்யா லண்டனில் பிறந்தவர். இவரது பெற்றோர் இந்திய எழுத்தாளரும் சுதந்திர போராட்ட வீரருமான சுரேஷ் வைத்யா மற்றும் ஆங்கில பாரம்பரிய பாடகர் மேட்ஜ் ஃபிராங்கீஸ். ஜலபாலா வைத்யா, ஆரம்ப காலத்தில் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.  

 ஜலபால வைத்யா டெல்லி அரசாங்கத்தின் வரிஷ்ட் சம்மான், சங்கீத நாடக அகாடமியின் தாகூர் விருது, டெல்லி நாட்டிய சங்க விருது, ஆந்திரப் பிரதேச நாட்டிய அகாடமி கௌரவம் மற்றும் அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தின் கௌரவ குடியுரிமை போன்ற பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். ஜலபாலா வைத்யாவின் நாடக வாழ்க்கை 1968 இல் "ஃபுல் சர்க்கிள்" உடன் தொடங்கியது. ஷர்மனுடன் இணைந்து அக்ஷரா நேஷனல் கிளாசிக்கல் தியேட்டரை நிறுவினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஜலபாலா வைத்யா

ஜலபாலா வைத்யா 20 நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இந்த நாடகங்களில்,  "Full Circle", "The Ramayana", "Let's Laugh Again", 'Larflarflarf', "The Bhagavad Gita", "The Cabuliwala", 'Gitanjali', and 'The Strange Case of Billy Biswas" ஆகியவை மிகவும் பிரபலமானவை. இந்த நிலையில் டெல்லியில் ஜலபாலா வைத்யா காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், நாடக, திரைப்பட பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web