மூத்த தலைவர் நல்லகண்ணு நலமுடன் வீடு திரும்பினார் - வைகோ நேரில் சந்திப்பு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், முதுபெரும் அரசியல்வாதியுமான இரா. நல்லகண்ணு (100) அவர்கள், சுவாசக் குழாயை (டிரக்யாஸ்டமி குழாய்) மாற்றுவதற்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதே நாள் மாலையே சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார். அவருக்குத் தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், நல்லகண்ணு அவர்கள் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அதன்பின்னர், அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்ட காரணத்தினால் அவர் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ச்சியாக 45 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளித்த நிலையில், அவர் சுவாசிப்பதற்காகத் தொண்டை பகுதியில் டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டு, அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், அந்தக் குழாயை மாற்றுவதற்காக அவர் மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சில மணி நேரச் சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்கள் அந்தக் குழாயைச் சரியாக மாற்றி அவரை அதே நாள் மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவைச் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
