வீடு திரும்பினார் வைகோ... தோளில் பொருத்தப்பட்ட பிளேட் அகற்றம்!

 
வைகோ
 


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தோளில் பொருத்தப்பட்டிருந்த பிளேட் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நேற்று வீடு திரும்பினார்.

இந்தியை திணிக்க முயன்றால் இந்தியா பல நாடுகளாக சிதறும்: வைகோ எச்சரிக்கை

முன்னதாக கட்சி நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக கடந்த மே 25ம் தேதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்த போது கால் இடறி விழுந்ததில் வைகோவுக்கு இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. 

இதையடுத்து சென்னை திரும்பிய அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இடது தோளில் மூன்று இடத்தில் உடைந்திருந்த எலும்புகளை சரி செய்ய அம்மாதம் 29ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டது. 

வைகோ அழைப்பு

இந்நிலையில், தோளில் வைக்கப்பட்ட பிளேட்டை அகற்றுவதற்காக அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு வைகோ அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனைக்குப் பிறகு, பிளேட்டை மருத்துவர்கள் அகற்றினர். இதையடுத்து அவர் நேற்று வீடு திரும்பினார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web