வைகுண்ட ஏகாதசி... விஷ்ணு அருள் பெற இதை தானம் கொடுத்து, இந்த மந்திரத்தை 21 முறை சொல்லுங்க... வாழ்வில் வெற்றிகள் வசப்படும்!
இன்று அதிகாலை விஷ்ணு ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி திரளான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று விஷ்ணுவின் அருள் பெற பசு தானம் செய்தால் நல்லது. அதைப் போலவே இன்று இயலாதவர்களுக்கு அரிசி, துணி போன்றவைகளை தானமாக தரலாம்.
பூஜையறையில் தான் சொல்ல வேண்டும் என்பது கிடையாது. அமைதியான ஒரு இடத்தைத் தேர்வு செய்து மனம் ஒருமித்து, இன்று, “ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் நமோ நாராயணாய” என இந்த மந்திரத்தை 21 முறை சொல்லி மலர்களால் அர்ச்சித்து விஷ்ணுவை வழிபட துன்பங்கள் எல்லாம் பனி போல விலகிடும். இன்று விஷ்ணு சஹஸ்ரத்தை பாராயணம் செய்து வருவதோ, அல்லது கேட்பதோ சகல பாவங்களையும் நீக்கும்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!