வைகுண்ட ஏகாதசி... ஜன.10ம் தேதி உள்ளூர் விடுமுறை... கலெக்டர் உத்தரவு!

 
சொர்க்க வாசல், ஸ்ரீரங்கம்


திருச்சி மாவட்டத்திற்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

உள்ளூர் விடுமுறை

இதன்படி ஜனவரி 10ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் அத்தியாவசிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் வருகின்ற ஜனவரி 10ம்தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2,500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளனர்.

இந்நிலையில் உள்ளூர் மக்களும் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் கலந்து கொள்ள வசதியாகவும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் திருச்சி மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web