ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா 11 நாள் உற்சவம் இன்று தொடக்கம்!

 
ஸ்ரீரங்கம்
 

 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து விழாக்களும் தாயாருக்கும் நடத்தப்படுவது மரபாக உள்ளது. அந்த வகையில், உற்சவர் நம்பெருமாளின் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளது.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா! டிசம்பர் 14 திருச்சியில் உள்ளூர் விடுமுறை!!

இந்த விழா பகல் பத்து உற்சவத்துடன் ஆரம்பித்து வருகிற 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஐந்து நாட்கள் பகல் பத்து உற்சவமும், அடுத்து ஐந்து நாட்கள் இராப்பத்து உற்சவமும் நடைபெறும். பகல் பத்து நாட்களில் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே 2000 திருமொழி பாசுரங்களை தினமும் மாலையில் கேட்டருளுவார்.

திருச்சி பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல்

இராப்பத்து உற்சவமாக கொண்டாடப்படும் திருவாய்மொழி திருநாள் வரும் 15-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக 20-ந் தேதி இயற்பாச்சாற்று முறை நடைபெறும். இந்த விழாவில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!