மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்... கவிஞர் வைரமுத்து!

தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பல அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், இந்தி என்ற மொழி தன்னளவில் இயங்குவது அதன் உரிமை.
இன்னொரு தேசிய இனத்தின்மீது திணிக்கப்படும்போது அது புல்லுருவிபோல் உள்ளிருந்து தாய்மொழியின் உயிரை உறிஞ்சி விடும். இந்தியின் ஆதிக்கம் அதிகமான மராத்தி போன்ற மொழிகளுக்கு நேர்ந்த கதி. அதுதான் தமிழுக்கும். அது நேர்ந்துவிடக்கூடாது என்று தான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பது போன்றது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாட்டோடு தமிழர்கள் கெட்டியாக ஒட்டி நிற்கிறார்கள், அறிஞர் அண்ணாவும் உடன் இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!