கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு... பெரும் திடீர் பரபரப்பு!

 
வைரமுத்து

 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கவிஞர் வைரமுத்து வந்தார். அவரை அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்கள் மலர்தூவி வரவேற்றனர். நிகழ்ச்சி அமைதியாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் வைரமுத்துவை நோக்கி செருப்பை வீசியுள்ளார். இந்த எதிர்பாராத சம்பவத்தால் நிகழ்ச்சி இடத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் அந்த பெண்ணை அப்புறப்படுத்தினர்.

செருப்பு வீசிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திருப்பூரில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!