பாஜக நயினார் நாகேந்திரனுக்கு கருப்புக் கொடி காட்டிய வைஷாலி மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

 
நயினார்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் உதகைக்கு வருகை தந்தபோது, அவருக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் பெண் நிர்வாகி கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாஜக விவசாய அணியின் மாநில துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தவர் வைஷாலி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், உதகையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அப்போது, தான் நீக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டு வைஷாலி திடீரென அவருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி முழக்கங்களை எழுப்பினார்.

நயினார்

வைஷாலியின் இந்தப் போராட்டத்தை எதிர்பாராத அங்கிருந்த பெண் காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர், அவரைத் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது காவலர்களுக்கும் வைஷாலிக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பெண் காவலர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு அப்புறப்படுத்த முயன்றபோது, ஏற்பட்ட உடல்நலக் குறைவால் வைஷாலி திடீரென மயங்கி விழுந்தார்.

நயினார் நாகேந்திரன்

கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கம் கோரியும், அதற்கு நியாயம் கேட்டுமே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. கட்சித் தலைவரின் வருகையின் போதே முன்னாள் நிர்வாகி ஒருவரே கருப்புக் கொடி காட்டியது பாஜக தொண்டர்களிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில், இந்தச் சம்பவத்தால் உதகையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பும், அரசியல் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!