உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி வெண்கல பதக்கம்!

 
வைஷாலி  

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றுள்ளார்.  காலிறுதியில் சீனாவின் ஜு ஜினரை 2.5-1.5 என்ற கணக்கில் வைஷாலி தோற்கடித்துள்ளார்.  நியூயார்க்கில் உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது.

வைஷாலி  

இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு வைஷாலி முன்னேறியுள்ளார்.  காலிறுதியில் சீனாவின் ஜு ஜினரை 2.5-1.5 என்ற கணக்கில் தோற்கடித்த வைஷாலி, அரையிறுதியில்  ஜூ வென்ஜுனிடம் 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

வைஷாலி  

இதனையடுத்து வைஷாலி வெண்கல பதக்கத்தை வென்றார்.  இந்த போட்டியில் வெண்கலபதக்கம் வென்ற வைஷாலிக்கு, ஐந்து முறை உலக சாம்பியனும், சர்வதேச செஸ் கூட்டமைப்பு  துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த், முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web