திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்... எம்.எல்.ஏ. பதவியைத் துறந்து ஸ்டாலின் முன்னிலையில் ஐக்கியம்

 
வைத்தியலிங்கம்

தமிழக அரசியலில் இன்று அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், டெல்டா மாவட்டத்தின் முக்கியத் தூணாகவும் கருதப்பட்ட வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு முறைப்படி திமுகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மிக நெருங்கிய ஆதரவாளராகவும், அவரது அணியின் 'தளபதி'யாகவும் வலம் வந்த வைத்திலிங்கம், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்ற வைத்திலிங்கம், சபாநாயகர் எம். அப்பாவு அவர்களை நேரில் சந்தித்துத் தனது ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பதவி விலகிய சில நிமிடங்களிலேயே அண்ணா அறிவாலயம் வந்த அவரை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

வைத்தியலிங்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குச் சால்வை அணிவித்துத் தன்னைத் திமுகவில் இணைத்துக் கொண்டார் வைத்திலிங்கம். இந்த நிகழ்வின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் உடனிருந்தனர். வைத்திலிங்கத்துடன் சேர்ந்து அவரது மகன் பிரபுவும் திமுகவில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய நிர்வாகிகள் திமுகவிற்குச் சென்ற நிலையில், ஓபிஎஸ் அணியில் செல்வாக்குமிக்க ஒரே முகமாக வைத்திலிங்கம் மட்டுமே இருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் இணைய வாய்ப்பில்லை என்பதும், ஓபிஎஸ் அணியின் தேக்க நிலையும் இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வைத்திலிங்கத்திற்கு இருக்கும் பெரும் செல்வாக்கைத் திமுக அறுவடை செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய 'ஐவர் அணியில்' (நால்வர் அணி) ஒருவராக இருந்தவர். 2001-2006 மற்றும் 2011-2016 காலகட்டங்களில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். ஒரத்தநாடு தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!