ஒரத்தநாடு தொகுதி காலி... வைத்திலிங்கம் ராஜினாமாவை அடுத்து அரசிதழில் வெளியீடு!

 
வைத்திலிங்கம் வைத்திலிங்கம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததை அடுத்து, ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி ஜனவரி 21ம் தேதி முதல் காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதி அதிகாரப்பூர்வமாக காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம், தனது மகன் பிரபுவுடன் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதற்காக அவர் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்ட வைத்திலிங்கம், 2022-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிமுக ஒன்றிணைப்பு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ஓபிஎஸ் அணி அரசியல் குழப்பத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அந்த அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், பழனி சுப்புரத்தினம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். தற்போது வைத்திலிங்கமும் திமுகவில் இணைந்ததை அடுத்து, ஓபிஎஸ் அணியில் மேலும் அதிருப்தி அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!