எடப்பாடி நடவடிக்கைகள் பிடிக்கல... திமுகவில் இணைந்த பின் வைத்திலிங்கம் பரபரப்பு!
ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் எம்.அப்பாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்த ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டப்பேரவையில் பதிவு செய்யப்பட்டது.

ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம் திமுகவில் சேர்ந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவில் இணைந்த பிறகு பேசிய வைத்திலிங்கம், அதிமுகவில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றார். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார். திமுக மட்டுமே மக்கள் நலனுக்காக செயல்படுகிறது என கூறினார். 2026 தேர்தலுக்கு முன் இந்த அரசியல் மாற்றம் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
