வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல்... காதலியை இம்ப்ரஸ் செய்ய சூப்பர் ஐடியாஸ்!
இன்று உலகம் முழுவதும் காதலர் தினக் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி இருக்கிறது. சாக்லேட் தொடங்கி டெடி வரையில் ஒவ்வொரு நாளும் தினுசு தினுசாக காதலைக் கொண்டாடி வருகின்றனர். இதில் காதலியோ காதலனோ கிடைக்காமலும் கொண்டாட்டங்களுக்கு ஏங்கி வருபவர்களும் அடக்கம். இன்று வேலண்டைன்ஸ் டேவுக்கு தங்களது காதலன், காதலிக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என இப்போதே ப்ளாண் பண்ணிக்கோங்க.
உங்களது அன்புக்குரியவர்களின் இதயங்களை வெல்வது எப்படி? நீங்கள் கொடுக்கும் பரிசு அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்குமா? இதோ சில அசத்தலான ஐடியாக்கள்
ஒவ்வொரு வருஷமும் ரோஜாக்கள், சாக்லேட்டுகள் மற்றும் இரவு உணவு விருந்துகள் என பல சர்ப்பரைஸ் நிகழ்வுகள் நடக்கின்றன. உங்களது அன்பான இணைக்கு வேடிக்கையான, மனதைக் கவரும், மறக்கமுடியாத ஆச்சரியத்தை கொடுக்கும் பரிசு. அந்த பரிசு புதிய வழியில் உறவை உயிரோட்டமாக மாற்றும் வகையில் இருக்க வேண்டும்.

கடிதம்
இந்த ஐடியா கொஞ்சம் பழையது தான். ஆனால் உங்கள் உணர்வுகளை காகிதத்தில் வெளிப்படுத்துவது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். உங்கள் இணையருக்கு காதல் கடிதம் எழுதலாம். அதில் நீங்கள் அவர்களை நேசிக்க தொடங்கிய தருணம், சிறப்பு தருணங்கள் , எதிர்காலத்திற்கான கனவுகள் இவைகளை எழுதினால் இது அவர்களின் இதயத்தைத் தொடும், உங்கள் உறவை மேலும் பலப்படுத்தும்.
பூக்களைப் பரிசளியுங்க
சின்னஞ் சிறிய பரிசுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் இணையருக்கு ரோஜாக்கள், சாக்லேட்டுகள் அல்லது தனிப்பட்ட பரிசுகளை அனுப்பலாம். அதில் ஒரு இனிமையான செய்தியைச் சேர்க்கலாம். அன்பை சொல்ல எளிமையான சிறிய வழி.
காதலியுடன் வாக்கிங் (அ) மலையேற்றம்
உங்கள் இணையரை ஒரு அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு அழைத்துச் செல்லலாம். இருவரும் ஒன்றாக அழகான புகைப்படங்களை எடுத்துக் கொண்டே இயற்கையின் அழகை அனுபவிக்கலாம்.

பிடித்த இடத்திற்கு சுற்றுலா
உங்கள் துணைக்கு பிடித்த இடத்தில் சுற்றுலாவைத் திட்டமிடுங்கள். பிடித்த தின்பண்டங்கள், பானங்கள் மற்றும் சில பிடித்த பாடல்களின் பிளேலிஸ்ட்டைக் கொண்டு வாருங்கள். இது உங்கள் இருவருக்குமான தனிப்பட்ட உறவை மேலும் ஆழப்படுத்தும்.இந்த காதலர் தினத்தில், இந்த யோசனைகளுடன் உங்கள் இணையருக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை கொடுக்கலாம்.
உங்கள் அன்பு, கவனிப்பு மற்றும் கவனம் ஆகியவை சிறந்த பரிசுகள். உங்கள் துணையின் ஆர்வங்கள் மற்றும் பிடித்த விஷயங்களை கவனித்து, அவர்களுக்கு ஒரு சிறப்பு நாளை உருவாக்கலாம். அத்துடன் ஏதாவது ஒரு திரைப்படம், பரிசு, இரவு அல்லது மதிய உணவுக்கான திட்டங்களை முன்னெடுக்கலாம். ஏதேனும் இடத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டால், முன்கூட்டியே அங்கு விசாரித்து, முன்பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். கடைசி நிமிட அவசரத்தில் இந்த நாளை, அந்த தருணத்தின் மகிழ்ச்சியை வீணாக்காதீர்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
