"உலக அரங்கில் பாரதத்திற்கு பெருமை சேர்த்தவர் வள்ளுவர்!" - நயினார் நாகேந்திரன் திருவள்ளுவர் தின வாழ்த்து!
திருவள்ளுவர் தினமான இன்று, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வள்ளுவம் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
"வையம் உள்ளவரை வள்ளுவன் புகழ் வாழும்" என்று குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், தமிழாலும் வள்ளுவராலும் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலக அரங்கில் ஒட்டுமொத்த பாரத தேசத்திற்கே பெருமை கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தான் செல்லும் நாடுகளிலெல்லாம் தமிழின் தொன்மையைப் போற்றி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மொழி இந்தியாவின் முதன்மையான மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் என்பதைப் பிரதமர் உலகிற்கு உணர்த்தியுள்ளதாகக் கூறினார்.
திருக்குறளைப் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்ததுடன், வடமாநில பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தமிழ் கற்பதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளதை நயினார் நாகேந்திரன் பாராட்டியுள்ளார். வாரணாசியில் நடத்தப்பட்ட "காசி தமிழ் சங்கமம்" நிகழ்வு இதற்குச் சிறந்த சான்று என்றும், அங்கு ஏராளமான வடமாநில மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழ் கற்பதைக் காண முடிந்தது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் தினத்தில் அய்யனின் புகழைப் போற்றி வணங்குவோம் என்று அவர் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
