100 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த வேன்... நூலிழையில் உயிர்பிழைத்த மாணவர்கள்!

 
பள்ளத்தில் வேன் பள்ளத்தில் வேன்

திண்டுக்கல் மாவட்டத்தில் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் விவசாயம் பயிலும் மாணவ, மாணவிகள் தனித்தனியே இரண்டு மினி வேன்களில் சிறுமலைக்கு களப்பயிற்சிக்காக சென்றிருந்தனர். அப்போது, சிறுமலை பகுதியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான இடங்களில் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு முடித்த பின்னர் மதியத்திற்கு மேல் மீண்டும் பல்கலைக்கழகத்தை நோக்கி திரும்பிக் கொண்டிரு ந்தனர்.

விபத்து

இவர்களது வேன் மழைச்சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது பிரேக் திடீரென பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்து

விபத்து குறித்து சம்பவ இடத்தில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் களப் பயிற்சிக்கு சென்று மீண்டும் தங்களுடைய கல்லூரி நோக்கி செல்லும் போது வாகனம் மலைச்சாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?