வேன் கவிழ்ந்து 3 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயம்!

 
வேன்
 

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா வேன் புதுக்கோட்டை அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம்புலன்ஸ்

சென்னை காஞ்சிபுரத்தை சேர்ந்த 22 பேர் காரைக்குடி செல்ல நேற்று காலை வேனில் புறப்பட்டனர். தினேஷ் என்பவர் வேனை ஓட்டினார். தஞ்சாவூர்-புதுக்கோட்டை கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரியாணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

போலீஸ்

இதில் வேனில் இருந்த அனைவரும் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!