பணம் படைத்தவர்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் 3 மொழியில் படிக்கிறார்கள்.... வானதி சீனிவாசன் வாதம்!

 
ஸ்டாலின் வானதி
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்ததற்கு பிறகு உலக அளவில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது தான் புதிய கல்வி கொள்கை. கல்வியாளர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்டு உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கல்வித்துறையை சீரமைக்க மாநில அரசு அமைத்த குழுவின் அறிக்கையில் கூறிய பல்வேறு சாராம்சங்கள் புதிய கல்வி கொள்கையில் உள்ளது. முன்னதாக 3 வது மொழி ஹிந்தி என்று இருந்ததை, 3 வது மொழியாக இந்தியாவின் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என மாற்றியவர் பிரதமர் மோடி. 

தர்மேந்திர பிரதான்


PM SHRI திட்டத்திற்கு முன்னதாக மாநில அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், அதனை அமல்படுத்தாததால் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை, மத்திய அரசின் திட்டங்கள் அமல்படுத்தாதபோது அந்த திட்டத்தின் நிதி பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது வாடிக்கை.தற்போது மாநில அரசு ஒப்புக்கொண்ட திட்டத்தை அமல்படுத்தவில்லை. திமுக மொழி ரீதியாக, பிரிவினை ரீதியாக ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கும் கட்சி. திமுகவின் கடந்த கால வரலாறுகளை எடுத்துப் பாருங்கள் திமுக பிரிவினைவாத கட்சி அல்லாமல் வேறென்ன? அவர்களின் பாரம்பரியம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ்நாட்டை இந்தியாவுடன் சேர விடாமல் தடுக்கும் போராட்டம் நடத்துவதுதான். தற்போது ஹிந்தி மொழியை திணிப்பதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

வானதி சீனிவாசன்
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலுமே இரு மொழிக் கொள்கை மட்டுமே உள்ளது என கூற முடியுமா? பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மட்டும் தனியார் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் மூன்று மொழியில் கற்க வேண்டுமா? சமூக நீதிக்கு அநீதி இழைக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்புகளை ஏன் தடுக்கிறீர்கள்? சங்கிகள் மட்டுமே திருப்பரங்குன்றம் பிரச்சினையை செய்வதாக அமைச்சர் சேகர்பாபு குற்றஞ்சாட்டுகிறார். திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என்று சொல்வதை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒப்புக்கொள்கிறாரா? அதற்கு அமைச்சர் பதிலளித்த பிறகு சங்கி வருகிறார்களா, மங்கி வருகிறார்களா என பார்க்கலாம் என தெரிவித்தார். நீட் நுழைவு தேர்வு மட்டுமல்லாது அனைத்து வகையான தேர்வுகளிலும் மதிப்பெண் கட் ஆப் தற்போது அதிகரித்துள்ளது” என கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web